ஒடிசா ரயில் நிலையம் – நெஞ்சை பதற வைக்கும் கோரவிபத்து !

ஒடிசா  ரயில் நிலையம் – நெஞ்சை பதற வைக்கும் கோரவிபத்து !

ஒடிசா மாநிலம்  கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை (ஜூன் 2) 7 .30 மணியளவில் கோர விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழுக்கு மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் 250 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் பயணித்த 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாலசோர் ரயில் விபத்து குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை விரிவுபடுத்தி ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக அரசு சார்பில் மீட்பு பணிக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கரும் ஒடிசா வுக்கு  புறப்பட்டு ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றனர். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனக் கூறி தனது ஆழ்ந்த வருத்தத்தையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து காரணமாக 38 ரயில் ரத்து செய்யப்பட்டு, 35 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.மீட்புபணியில் வீரர்கள்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related post

சதீஷ்கர் மாநிலத்தில்  கோர விபத்து கார் மீது லாரி மோதி 11 பேர் பலி !

சதீஷ்கர் மாநிலத்தில் கோர விபத்து கார் மீது லாரி மோதி 11…

சதீஷ்கர் மாநிலத்தில்  கோர விபத்து கார் மீது லாரி மோதி 11 பேர்   உயிரிழந்து உள்ளனர். சதீஷ்கர் மாநிலம்   சோராம் -பட்கான் கிராமத்தை சேர்ந்த 11 பேர்  மார்கடோலோ…