ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் தொடரான 16 ஆவது சீசனில் 54ஆவது போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் (மே 9)மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  இடையான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி பெங்களூர் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.. பெங்களூர் அணியானது 20 ஓவர்களில்   6 விக்கெட்  இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர் 200 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கினை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி ஆடத் தொடங்கியது.

மும்பை அணியின் வீரர்களான இஷான்கிஷன் ,சூர்யா குமார் யாதவ் மற்றும்  வதரா , ஆகியோர் சிறந்த முறையில் பேட்டிங் செய்து 16. 3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் மும்பை அணியானது 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 6 புள்ளிகள் பெற்று ஐ.பி.எல் போட்டியில் மூன்றாவது இடத்தினைப்  பெற்றுள்ளது.

Related post

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில்…
ராஜஸ்தான்  ராயல்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!

ராஜஸ்தான் ராயல்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!

மே 5 குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இன்று பலப்பரீட்சை. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல் போட்டிகள் விருவிருப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இந்நிலையில்       இன்று…