ஐபிஎல் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய10 அணிகள் பங்குபெறுகின்றன.
ஐபிஎல் தொடரில் ஐபிஎல் 17ஆவது சீசனில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சிஎஸ்கே மற்றும் ஆர்சிகே அணிகளுக்கு இடையே மோதல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் 17 ஆவது சீசனுக்கான தொடக்க விழாவில் முக்கிய பிரபலங்கள் நடிகை ,நடிகர்கள் நடனமாடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.