ஐபிஎல் கிரிக்கெட்டைக் காண்பதற்கு இலவச பயணம் கிடையாது என்று சென்னை போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!

ஐபிஎல் கிரிக்கெட்டைக் காண்பதற்கு இலவச பயணம் கிடையாது என்று  சென்னை போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை 24ஆம் தேதியும், 26 ஆம் தேதியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரனார் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டதாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வைத்து சென்னை மாநகர பேருந்துகளில் பயணித்திருந்தனர். 

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை என்றும்,வரும் 24,25 தேதி நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை.எனவே பயணிகள் பயண கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யுமாறு சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

Related post