ஏ வி எம் ஸ்டுடியோவின் ஹெரிடேஜ் அருங்காட்சியகம் -முதல்வர் திறப்பு : சென்னை வடபழனியில் உள்ள ஏ வி எம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி ஹெரிடேஜ் அருங்காட்சியத்தை (மே 7) ஆம் தேதி முதல்வர் மு. க ஸ்டாலின் திறந்து வைத்தார். சமீப காலமாகப் சில காரணங்களால் திரைப்படங்களைத் தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது ஏ வி எம் ஸ்டுடியோவில் ஒரு பகுதி திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் அதாவது 3 அரங்கில் ஒரு பகுதி 1910 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்ட சினிமா துறையில் பயன்படுத்தப்பட்ட மிகவும் பழமையான ஒளி பதிவு கருவிகள், ஆடியோ, பிலிம் சுருள்கள், விளக்குகள்,40க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கார்கள், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் போன்றவை ஹெரிடேஜ் அருங்காட்சியத்தில் கண்காட்சியாக இடம்பெற்றன.
இந்த அருங்காட்சியத்தில். ஏ வி எம் சரவணன் அவரது மகன் குகன் ,உலக நாயகன் கமலஹாசன் , நடிகர் சிவகுமார், முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் முதல்வர் அங்கு வைக்கப்பட்டு அந்த ஏவிஎம் ஸ்டூடியோவின் பழமையான சுருள் உருண்டை மற்றும் கருணாநிதி வசனத்தில் வெளிவந்த திரைப்படம் பராசக்தி நினைவுத்தூண் அருகே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.