எல் கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது !

எல் கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது !


பாஜக முத்த தலைவருமான முன்னாள் துணை பிரதமருமான எல் கே அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது இந்த நிலையில் இந்தியாவின் வளர்ச்சியில் உள்துறை மந்திரியாகவும் ,தகவல் தொடர்பு அமைச்சராகவும் அத்வானி செய்த சாதனை மகத்தானது. எல் கே அத்வானி நாடாளுமன்றத்தில் மிகச்சிறப்பான பணியினை ஆற்றியவர்.”எல்.கே.அத்வானிக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”அவருடன் பழகுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது பாக்கியம் என்று கருதுகிறேன் என்று எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பாரத ரத்னா விருது பெற்ற அத்வானி குடும்பத்தினரும், அவரின் மகள் தந்தைக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்ததை வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.

Related post