உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலக  நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின் ‘Thug life’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.உலகநாயகன் கமலஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் இணைந்து ‘Thug life ‘ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகை திரிஷா, நடிகை நயன்தாரா, நடிகர் துல்பர் சல்மான் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.ரவி கே சந்திரன் ஒளிப்பதிவிலும், அன்பறிவு சண்டை பயிற்சிகளிலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் திரைப்படத்தின் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இயக்குனர் மணிரத்னம் KH 234 திரைப்படத்தின் டைட்டிலை உலகநாயகன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வெளியிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து KH 234 திரைப்படத்தின் கமலஹாசனின் மிரட்டலான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே உலக நாயகன் கமலஹாசனின் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

Related post

உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ரிலீஸ்!

உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ரிலீஸ்!

உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அனைத்து திரையரங்குகளில் விரைவில் வெளியாகிறது. இந்தியன் 2 திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி…
நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு…
குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி விடுமுறை முடிந்து…