உலக தண்ணீர் தினமாக மார்ச் 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது!

உலக தண்ணீர் தினமாக மார்ச் 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது!


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டிலிருந்து ஜக்கிய நாடுகள் சபையால் தண்ணீர் தின நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் 844 மில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் உள்ளனர். இந்த வருடம் 2024இல் அமைதியான நீரை மேம்படுத்துதல் என்ற விழிப்புணர்வுடன் தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் பொதுமக்களிடையே உலக தண்ணீர் தினம் என்பது தண்ணீரின் பிரச்சினைகளைப் பற்றியும், நீர் மாசுபாடு, தண்ணீர் பற்றாக்குறை, சுகாதாரமின்மை, போதிய நீர் வழங்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் முக்கிய பிரச்சினை ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.மக்கள் அனைவரும் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Related post