உலக ச் சதுரங்க சாம்பியன் போட்டியில் அரியலூர் அரசு பள்ளி மாணவி மூன்றாவது இடம் பிடித்து சாதனை !

உலக ச் சதுரங்க சாம்பியன் போட்டியில் அரியலூர் அரசு பள்ளி மாணவி மூன்றாவது இடம் பிடித்து சாதனை !

உலகச் சதுரங்க சாம்பியன் போட்டியில் அரியலூர் அரசு பள்ளி மாணவி சர்வாணிக்கா மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் வசிக்கும் சரவணனின் மகள் சர்வாணிக்கா. இவரின் வயது (8).இவர் அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு  படித்துக் கொண்டிருக்கிறார்.  சர்வாணிக்கா சதுரங்க விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் மாவட்ட, மாநில தேசிய எனச் சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டம் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றவர்.  தற்போது  ஜார்ஜியா நாட்டில் 8 வயது முதல் 18 வரை உலகச் சதுரங்க சாம்பியன் போட்டி கடந்த வாரம் 6 தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து , இலங்கை அமெரிக்கா உள்பட நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சர்வாணிக்கா கலந்து கொண்டு 11 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்று உலகளவில்  சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில்  மூன்றாம் இடம் பிடித்து   வெண்கலப் பதக்கம் வென்று நமது தாய் நாட்டிற்கும் தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Related post

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த அரியலூர் மாணவன்!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த அரியலூர் மாணவன்!

கால்நடை இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானதில் அரியலூர் மாணவன் ராகுல் காந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி 12ஆம்…