உலகப் புகழ் பெற்ற நயகாரா அருவியில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணம் ஒளிரூட்டப்பட்டது. நமது நாட்டின்பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்களாக அரசு பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ.பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வரவேற்று விருந்தளித்தனர். இந்த விருந்தில் பிரதமர் மோடியுடன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி , கூகுள் சி.இ.ஓ மற்றும் இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நமது இந்திய பிரதமரை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் மற்றும் மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்திலும் இந்திய தேசிய கொடியின் மூவர்ணம் நிறம் ஒளிருடப்பட்டது. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நேற்று அமெரிக்காவின் நேரப்படி இரவு 10 மணி அளவில் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் தேசியக்கொடியின் மூவர்ண நிறமான ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் ஒளிரூட்டப்பட்டு அழகாக காட்சியளிக்கப்பட்டது. மேலும் மூவர்ண நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டு, அங்கு வந்திருந்த அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.