உலகநாயகன் கமலஹாசனும் இயக்குனர் மணிரத்தினமும் 234 ஆவது படத்தில் இணைகிறார்கள்!

உலகநாயகன் கமலஹாசனும் இயக்குனர் மணிரத்தினமும் 234 ஆவது படத்தில்  இணைகிறார்கள்!

 உலகநாயகன் கமலஹாசனும் 234 ஆவது படத்தில் இயக்குனர் மணிரத்தினமும் இணைகிறார்கள்.உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தினை டைரக்டர் மணிரத்தினம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ்  நிறுவனம் தயாரிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளார், ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்கயுள்ளார் . இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி, மலையாள சினிமாவின் துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். நாயகன் திரைப்படத்தை அடுத்ததாக 35 வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் மணிரத்தினமும், உலகநாயகன் கமலஹாசனும் இந்த திரைப்படத்தில் இணைகிறார்கள். கமலஹாசனின் 234 ஆவது படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.எனவே கமலஹாசனின் விக்ரம் படத்திற்கு அடுத்ததாக ஹிட் படமாக இந்தத் திரைப்படம் அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது..

Related post

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு…
குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி விடுமுறை முடிந்து…
உலக  நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின்…