உரிமம் பெறாத கடைகளில் பீடி,சிகரெட் விற்பனை தடை .தேநீர் கடைகள், மளிகை கடைகள் மற்றும் சிறிய சிறிய பெட்டி கடைகளில் பீடி,சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் உள்ள கடைகளில் மட்டும் புகையிலை சம்பந்தமான பீடி ,சிகரெட் விற்பனை செய்ய முடியும் எனச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு இவ்வித புகையிலை வழங்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் பீடி,சிகரெட்டை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் 20 கோடிக்கு மேலானோர் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர் எனச் சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டதில் தகவல்களை வெளியிட்டுள்ளது. எம்.ஜி.எம் மருத்துவமனை நிபுணர்கள் நாட்டில் 90 சதவீத ஆண்கள் புகையிலை பயன்படுத்துவதால் உடல் நலிவுற்று அவர்களின் பணி திறன் பாதிக்கப்படுகிறது.
ரேவா மருத்துவமனை நுரையீரல் நிபுணர்களும் தங்களிடம் வரும் நுரையீரல் அடைப்பு நோயில் சம்பந்தப்பட்டவர்கள் 70% பேர் புகையிலைக்கு அடிமையாகி உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் புகையிலையால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புகையிலை பயன்பாட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 1.6 லட்சம் கோடி உற்பத்தி இழப்பீடு ஏற்படுகிறது. சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் (மே31)கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே புகையிலை குறைப்பதற்காக சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.