ஈஷா பிரம்மோற்சவம் கிராமிய திருவிழா

ஈஷா பிரம்மோற்சவம் கிராமிய திருவிழா

தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . ஈஷா அவுட்ரி அமைப்பு சார்பில் 15ஆவது முறையாக மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு ,கர்நாடகா, ஆந்திரா ,கேரளா மற்றும் புதுச்சேரி, தெலுங்கானா போன்ற மாநிலங்களின். 25000 கிராமங்களிலிருந்து சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமப்புற மக்கள் விளையாட்டில் பங்கேற்கின்றனர். இந்தத் திருவிழாவில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ ,மாணவியர்கள் , குடும்பபெண்கள் ,முதியவர்கள் மற்றும் வீரவீராங்கனைகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈஷா பிரமோற்ச குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுவாமி நகுஜா செய்தியாளர்களிடம் ஆண்களுக்கு வாலிபால் போட்டியும் , பெண்களுக்கு த்ரோபால் போட்டி ,மற்றும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு கபடி போட்டிகள் என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளதாகவும தெரிவித்தார்.இப் போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்களுக்கு லட்சம் தொகையில் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க விரும்புவர் https://isha.sadhguru.org/in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். என்பதையும் ஈஷா பிரம்மோற்சவம் தெரிவித்துள்ளது.

Related post