இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15  தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை! தமிழக மீனவர்கள் 15 பேர் இன்று விடுதலை என  இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் அரசு முறை சுற்றுப்பயணமாக இரண்டு நாட்கள் இந்தியா வந்துள்ளார். அப்போது வெளியுறவு துறை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்திலிருந்து  இலங்கை அதிபர் ரணில் அவர்களை வரவேற்றார். இதை தொடர்ந்து புதுடெல்லி ஹைதராபாத்திலுள்ள பிரதமர் மோடி இல்லத்தில் இலங்கை அதிபர் ரணில், பிரதமர் மோடி இருவரும் சந்தித்து இந்தியா இலங்கை இடையான ஒப்பந்தங்களை வலுவுபடுத்திக் கொண்டனர்.

மேலும் பிரதமரிடம் ஆலோசனை செய்த இலங்கை அதிபர் ரணில் “ஜூலை 8 தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் இன்று விடுதலை செய்ய இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதிகளுடன் உத்தரவிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் 15 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவர் என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்”  மேலும் தமிழக மீனவர்கள் 15 பேர் இரண்டு நாட்களில் தமிழகம் வந்த அடைவார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Related post