இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் -தமிழக அரசு அதிரடி உத்தரவு

இரண்டு  ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் -தமிழக அரசு அதிரடி உத்தரவு

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ ஈசிஆர் சாலை பகுதியில் ஆதித்யா பேலஸில் (செப்டெம்பர் 10தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது ஈசிஆர் பகுதியில் சாலை போக்குவரத்து ஏற்பட்டது .இதனால் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி சங்கர் ஜூவாலிடம் ஆலோசனை நடத்தினார். 

இது தொடர்பாக சென்னை பள்ளிக்கரணை சட்ட -ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன், சென்னை கிழக்கு சட்டம் -ஒழுங்கு இணை ஆணையர் தீபா மிட்டல் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related post

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூர் அருகே  அமைக்கபட்டு வருகிறது. சென்னையில் இருந்து  40 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட கிளாம்பாக்கத்தில் …