இயக்குனர் சசிகுமாரின் நடிப்பில் freedom திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது!

இயக்குனர் சசிகுமாரின் நடிப்பில் freedom திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது!

இயக்குனருமான நடிகருமான சசிகுமாரின் ஃப்ரீடம் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. இந்தத் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை லிஜோ மோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார் . சத்தியசிவா இயக்கத்தில் ஃப்ரீடம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பினை ஸ்ரீகாந்த்தும் வழங்குகிறார். இந்த நிலையில் சசிகுமாரின் அசத்தலான தோற்றத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் ,தேவி ஸ்ரீ பிரசாந்த் ,உன்னி முகுந்தன் ஆகியோர் சசிகுமாரின் ஃப்ரீடம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Related post