இந்திய வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதன் மறைவிற்கு அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி!

இந்திய வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதன் மறைவிற்கு அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி!

இந்திய வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் (வியாழக்கிழமை 28 .9.2023 அன்று காலை 11. 20 மணியளவில் உயிரிழந்தார். . சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். மேலும்விவசாயிகளுக்கான இந்திய அரசின் தேசிய ஆணையத்தின் தலைவராகவும், அறிவியல் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான உலகக் குழுவின் (CFS) உயர்நிலை நிபுணர் குழுவின் (HLPE) தலைவராகவும் பணியாற்றிய சிறப்புக்குரியவர் . இவர் இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானி பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்

இவரின் மறைவு தமிழ்நாட்டிற்கும் விவசாயத்திற்கும் ஈடில்லா இழப்பு என்று இறப்பு என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின்இறுதி ஊர்வலம் சனிக்கிழமை இன்று (30.9.2023) தமிழக அரசு மரியாதை உடன் காவல் துறை முன்னிலையில் நடைபெற்றது.விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதன் அவர்களின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆர் என் ரவி ,துரைசாமி, மா சு இபிஎஸ் அஞ்சலி செலுத்தி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Related post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு  அரசு மரியாதை உடன் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை உடன் அஞ்சலி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை உடன் அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மியாட் மருத்துவமனையில் டிசம்பர் 26 ஆம் தேதி…
19 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம்-பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி !

19 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம்-பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி !

19 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…