இந்திய முன்னாள் பிரதமர் விபி.சிங் சிலை திறப்பு !

இந்திய முன்னாள் பிரதமர் விபி.சிங் சிலை திறப்பு !

இந்திய முன்னாள் பிரதமர் வி பி சிங் சிலையைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமூக நீதி காவலரான விபி சிங் திருவுருவச் சிலையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார் . இதற்காக 52 லட்ச மதிப்பில் புதிதாக செலவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் விபி சிங் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டிற்காக காவிரி நதிநீர் பிரச்சினைத் தீர்ப்பாயம் அமைத்து தந்தவர் .மேலும் பிற்பட்ட மக்களுக்காக அரசு பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வாங்கி தந்தவர். மேலும் முன்னாள் இந்திய பிரதமர் வி பி சிங்ப நீதி காவலராக இருந்து சமூகத்திற்காக பல்வேறு தொண்டுகளைச் செய்தவர்.

இவரின் திருவுருவச் சிலையைதீ தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார் . இந்நிகழ்ச்சியில் வி பி சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன்கள் அஜயா சிங், அபய் சிங் கலந்து கொண்டனர். மேலும் பல எம்எல்ஏக்கள், கட்சித் தலைவர்கள் ,அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர் .இதைத்தொடர்ந்து கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் உரையாற்றினார்.

Related post