இந்திய குத்து சண்டை வீராங்கனை நிகாத் ஷரீனுக்கு (Nikhat Zareen) மகேந்திரா நிறுவனம் கார் பரிசு!

இந்திய குத்து சண்டை வீராங்கனை நிகாத் ஷரீனுக்கு (Nikhat Zareen) மகேந்திரா நிறுவனம் கார் பரிசு!

இந்திய குத்து சண்டை வீராங்கனை நிகாத் ஷரீனுக்கு (Nikhat Zareen) மகேந்திரா நிறுவனம் கார் பரிசாக வழங்கியுள்ளது.  இந்த வருடம் 2023 மார்ச் மாதம் டெல்லியில் உலகப் பெண்கள் குத்து சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்றது.  இந்தப் போட்டியில் (5.0) புள்ளி  என்ற கணக்கில் இந்திய வீராங்கனை நிகாத் ஷரீன் (Nikhat Zareen)  தங்கப்பதக்கம் வென்றார். இந்தப்  போட்டியில் வெற்றி பெற்றதற்காக விருது வழங்கும்  விழாவில் ‘மகேந்திராவின் வளர்ந்து வரும் பாக்சிங் ‘ஜகான்’ என்ற விருது வழங்கப்பட்டு பரிசு வழங்குவதாக மகேந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்தியாவின் பெருமையை விளையாட்டுத் துறையில் சேர்ப்பதற்காக சிறப்பாக விளையாடும் வீர, வீராங்கனைகளுக்கு மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் பரிசுகளை வழங்கி வருகிறது.  முன்னதாகவே அறிவித்ததன் படி நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 9 )தேதி அன்று  ஹைதராபாத்தில் உள்ள மகேந்திரா டீலர்ஷிப் மையத்திலிருந்து புதிய தார் SUV வகை காரை  இந்திய குத்து சண்டை வீராங்கனை நிகாத் ஷரீனுக்கு (Nikhat Zareen)  பரிசாக வழங்கி கௌரவித்து மகேந்திரா நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Related post