நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . பங்குனி மாத பௌர்ணமி தின நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.. பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுப்பதற்கு முந்தைய நிகழ்வாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்த நாளில் மகாவிஷ்ணுவையும் , மகாலட்சுமியையும் செல்வம் பெருக வேண்டும் என்று பொதுமக்கள வேண்டிக்கொள்கின்றனர். இந்த வருட ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு மார்ச் 17ஆம் தேதி முதலே ஹோலி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். எனவே நாடு முழுவதும் வண்ணங்களின் திருவிழாவாக ஹோலி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.