இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025 ஆண்டில் வெளியாகும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்திருந்தது.அதனபடி ஸ்கோடாவின் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களின் கார் வகைகளை இந்தியாவில் வெளியிடுவதில் உறுதியைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 2.0 எனும் திட்டத்தின் கீழ் ஸ்கோட நிறுவனம் முதலில் ஹோக்ஸ்வேகன் எனும் புதிய கார்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்தது. தற்போது இந்தியாவில் ஸ்கோடா நிறுவனமானது ‘எங்களது மின்சார வாகங்களைத் தயாரிக்க வரும் 2027 ஆம் ஆண்டு தனது கார் வகைகளின் புதிய மாடல்களைக் கட்டமைக்க உள்ளோம்’என உறுதியினைத் தெரிவித்துள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல்களின் எலக்ட்ரிக் கார் வகைகளைக் கார் பிரியர்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.