இந்தியாவில் தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 77ஆவது நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது!

இந்தியாவில் தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 77ஆவது நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது!

இந்தியாவில் நமது தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 77ஆவது நினைவு நாள் இன்று (ஜனவரி 30 ஆம் தேதி )கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அகிம்சை முறையில் போராடியவர் நமது மகாத்மா காந்திஜி ஆவார்.இவர் டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எனவே இறந்த நாளில் டெல்லியில் ராஜ் காட்டில் காந்தியடிகள் நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் அனைவரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். .இந்த வருடம் டெல்லியிலுள்ள காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி ,குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ,துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

 
 

Related post