இந்தியாவில் சர்வதேச பழங்குடியினர் தினமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.. உலகளாவிய நாடுகளில் 320 மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் அடர்ந்த காடுகளில் வனப்பகுதிகளில் பழங்குடியினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். எனினும் பல நாடுகளில் காடுகளிலிருந்து பழங்குடியினர்களை விரட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. பழங்குடியினர்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் பழங்குடியினரின் மொழி மற்றும் வாழ்க்கை தரத்தை உறுதி செய்வதற்காக , அவர்களை முன்னேற்றுவதற்காக பட்டா வீடு, நிலம், வனப்பொருள் சேகரிப்பு உரிமை, வனத்தை பாதுகாக்க இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற பல கோரிக்கைகளைப் பழங்குடிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே பழங்குடியின மக்களுக்கு முன் வந்து உதவி செய்ய வேண்டும் என அரசிடம் பல சமூக ஆர்வலர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.