இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இசைஞானி இளையராஜாவின் அலுவலகத்திற்கு இன்று (ஜுன் 2) முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேரில் சென்று இசைஞானி இளையராஜாவிற்கு நினைவு பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இளையராஜா அலுவலகத்தில் முதலமைச்சருடன் கே.என். நேரு, பொன்முடி ,திமுக கட்சி தலைவர்கள் மற்றும்நடிகர் பூச்சி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இளையராஜா அவர்கள் ’14 வயது முதல் இன்று 81 வரை இசையுலகில் பெரிய சகாப்தத்தை’ ஏற்படுத்தியுள்ளார். எனவே இசை கலைஞன் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இளையராஜாவை செய்தியாளர்கள் சந்திக்க அனுமதி பெற்று வருகின்றனர். மேலும் பெரும்பாலான திரை பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.