இசைக்குயில் பவதாரணி மறைந்தார்!

இசைக்குயில் பவதாரணி மறைந்தார்!

இசைஞானி இளையராஜாவின் மகள் இசைக்குயில் பவதாரணி மறைந்தார்.இளையராஜாவின் செல்ல மகள் பவதாரணி. இவர் ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, அழகி, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்த, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.இவர் இசைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். . பவதாரணி ‘மயில் போன பொண்ணு ஒன்ணு பாடலுக்கு தேசிய விருது’ பெற்றவர். இவரின் வயது( 47) . இவர் கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் பலனின்றி ஜனவரி 25ஆம் தேதி பவதாரணி உயிரிழந்தார். இவருடைய உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இவர் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள பவதாரணி தாயார் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது .

இந்த நிலையில் பவதாரணியின் அனைத்து ரசிகர்களும் , இசை கலைஞர்களும் முக்கிய பிரமுகர்களும் பவதாரணிக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related post

இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்தார். இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இசைஞானி…