ஆவின் டிலைட் ஊதா நிறப் பால் 200 மில்லி லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை!

ஆவின் டிலைட் ஊதா நிறப் பால் 200 மில்லி லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை!

ஆவின் டிலைட் ஊதா நிறப் பால் 200 மில்லி லிட்டர் இன்று டிசம்பர் 1ஆம் தேதி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பச்சை நிற பால் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பச்சை நிற பாலை நிறுத்தக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர்.. இந்த நிலையில் பச்சை நிறப் பால் பாக்கெட் வழக்கம்போல் விற்பனையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ஆவின் டிலைட் ஊதா நிற பால் 200 மில்லி பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . இந்த ஊதா நிறப்பால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் டிசம்பர் 1 இன்று முதல் விற்பனைக்கு தொடங்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்  இதில் 3 . 5 சதவீதம் கொழுப்பு சத்து இருப்பதாகவும், வைட்டமின் ஏ, டி சத்துக்கள் நிறைந்த பாலாகவும், சிறியவர் முதல் முதியோர் வரை அனைவரும் பருகக் கூடிய பாலாகவும் உள்ளது என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related post