ஆவணப்படமாகும் அஜித்தின் உலகப் பயணம்!

ஆவணப்படமாகும் அஜித்தின் உலகப் பயணம்!

அஜித்தின் உலகப் பயணம்  கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று தனது உலக சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தை முடித்தார். லடாக் உட்பட பல மாநிலங்களில் இருந்து அவரது புகைப்படங்கள் வைரலானது. எப்போதும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கும் அஜித் இந்தப் பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அஜித்தின் அடுத்தக்கட்ட பயணத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியானது. தற்போது அதைப் பற்றிய விவரமான செய்தி கிடைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 62 படத்திற்குப் பின் இந்த பயணம் துவங்கவிருக்கிறது. அதில் 16 நாடுகள் அடங்கும்.

வாழ்நாளில் சாதனை செய்ய விரும்பிய அஜித் குமார் தனது உலகப் பயணத்தை கேமராவில் பதிவு செய்ய விரும்பி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். நீரவ் ஷாவும் அஜீத் குமாருடன் பயணம் மேற்கொண்டு, ஆவணப்படத்தை ஷூட் செய்கிறார். சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் நிரவ் ஷாவால் சிறப்பாகப் படம் பிடிக்கப்படும். முதல் கட்டத்தின் காட்சிகள் ஏற்கனவே எடிட் செய்யப்பட்டு அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  பைக் சுற்றுப்பயணத்தை உலகுக்குக் காட்ட முடிவு செய்த அஜித் குமாரின் ஆவணப்படத்தை 2024ஆம் ஆண்டு இறுதியில் நெட்பிளிக்சில் எதிர்பார்க்கலாம்.

Related post

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

 விடாமுயற்சி திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் அஜித் ஏகே 63 திரைப்படத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இணைந்துள்ளார்.. நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 63 திரைப்படத்தின்…
நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி

நடிகர் அஜித்தின் Ak 62 திரைப்படமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக…