மதுரையில் கள்ளழகர் கோயிலில் ஆடி மாதம் தேரோட்டம் (ஆகஸ்ட் 1) இன்றுகாலை 6 மணிக்கு தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதுரை அழகர் கோயிலில் கள்ளழகர் ஆடித் தேர்த்திருவிழா கடந்த மாதம் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு 10நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆடி மாதம் பெரு திருவிழாவில் அழகர் தங்கப்பல்லக்கில் எழுத்தருளி, அன்னம், கருட வாகனம் ,சேஷா வாகனம் , யானைமற்றும் குதிரை என பல்வேறு வானங்களில் அருளித்தார். ஆடி மாத தேரோட்டம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கப்பட்டது. இங்கு இந்தத்தேரோட்டத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயார் பவானி அம்மன் உலா வந்தார். அப்போது தேரோட்டத்தைக் காண்பதற்காக வந்திருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த ஆடி மாத தேரோட்ட விழாவில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து குலதெய்வமான கள்ளழகரை வழிபட்டனர். ஆடி மாததேரோட்ட விழாவில் வந்திருந்த பக்தர்கள் மொட்டை அடித்து காணிக்கை செலுத்தி, கிடாவெட்டி ,பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர் . வழக்கம் போல் ஆடி மாதம் பௌர்ணமி நாளான இன்று (ஆகஸ்ட் 1) அழகர் தேரோட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து ஆகஸ்ட் 2 -ஆம்தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 3 -ம் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர் கோயிலில் ஆடி திரு விழா நிறைவு பெறுகிறது .