அறிவோம்ஆலயம்-திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் (திருவத்திபுரம், செய்யாறு)

அறிவோம்ஆலயம்-திருவோத்தூர் வேதபுரீஸ்வரர்    கோயில் (திருவத்திபுரம், செய்யாறு)

இறைவர் திருப்பெயர்        : வேதபுரீஸ்வரர்,வேதநாதர்.

இறைவியார் திருப்பெயர் : பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி.

தல மரம்                                 : பனை .

தீர்த்தம்                                   : கோயிலுள் உள்ள கிணறு. சேயாறு

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்களில் 8- ஆவது திருத்தலம்.இத்தலத்தின் மூலவர் வேதபுரீசுவரர், தாயார் இளமுலையம்பிகை. இத்தலத்தின் தலவிருட்சம் பனைமரமாகும். இறைவன் வேதபுரீசுவரர் வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர், முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ‘ஓத்துர்’ எனப் பெயர் பெறுகிறது.வேதம் ஓதுவித்த ஊர் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது. செய்யாறு என்ற நதி ஓடுவதாலும்,பார்வதி தனது மகன் முருகனுக்கு விளையாட திரிசூலம் மூலம் உருவாக்கியதான் ‘சேயாறு’ என்று அழைக்கப்படுகிறது.   

 

இந்த ஆலயத்தில் 9 வாசல்களைக் கடந்து சென்றால் தான் இறைவனை தரிசிக்க முடியும் திருஞானசம்பந்தரால் ஆண் பனைகளை பெண்பனைகளாக மாற்றும் அதிசயம் நிகழ்ந்த ஆலயம்.  கோயிலின் கருவறை அருகே 11 தலையுடன் பூமாதேவி  மேல் நாகலிங்கேஸ்வரர் காட்சியளிக்கிறார்.திருமணத்தடை உள்ளவர்கள் நாகலிங்கத்தை 21 வாரங்கள்  வழிபட்டால்  தீராத பிரச்சனை எல்லாம் தீரும் என்பது பக்தர்களின்   நம்பிக்கை.

 

Related post