அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

அருண் விஜய் வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் அருண் விஜய் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தைப் பிரபல இயக்குனரான பாலா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மிஷ்கின் ,சமுத்திரக்கனி போன்ற இயக்குனர்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க வைரமுத்து பாடல் வசனங்களை எழுதியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தினை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் மற்றும் பி ஸ்டுடியோ தயாரிக்கின்றது. வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் நேற்றைய தினம் மாலை வெளியானதில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார், மறு கையில சிலை கொண்டு புதிய வித தோற்றத்தில் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தை வெளியாகுவதால் பிதாமகன் திரைப்படத்தைப் போல அமையும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related post