அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை !

அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை !

அனைத்து கட்சிகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை. புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) வியாழக்கிழமை தொடங்குகிறது. இதன் காரணமாக மத்திய அரசு இன்று புதன்கிழமை (ஜூலை19) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனையை நடத்துகிறது. நாளை நடைபெறும் கூட்டுத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும்   முதலாவது கூட்டுத்தொடர் என்ற சிறப்பை பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மணிப்பூர் கலவரம், விலைவாசி ஏற்றம், மற்றும் விசாரணை அமைப்புகள் போன்ற உள்ளிட்டவற்றை விவாதிக்க ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாகவே மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார் எனினும் சிலர் சில கட்சிகள் பங்கேற்க முடியாததால் அந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை அறிமுகம் செய்து பட்டியலிட்டு நிறைவேற்ற மக்களவை செயலகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது  . மேலும் இந்தக் கூட்டுத்தொடரில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Related post

போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை!

போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் தலைமையில் போதை பொருள் தடுப்பு ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர்…
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் 2024 வருகிற ஆண்டில் நடைபெற உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி சென்னை கிண்டியில் நாடாளுமன்ற தேர்தல்…