அந்தமான் நாட்டில் வீர சாவர்கர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்!

அந்தமான் நாட்டில் வீர சாவர்கர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்!

அந்தமான் நாட்டில் வீர சாவர்கர் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி (ஜூலை 18) இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அந்தமானில் போர்ட் பிளேயர் நகரில் முன்னதாகவே 6100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக வீர சாவர்கர் விமான நிலையம்  அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு 707 கோடி செலவில் 40, 83 7 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக  அமைப்பதற்காக திட்டமிடப்பட்டது. இந்தப் புதிய பன்னாட்டு முனையம் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா காலகட்டத்தால் கட்டும் பணியில் தாமதமாயிருந்தது. தற்போது  பணிகள் நிறைபெற்ற நிலையில் பிரதம நரேந்திர மோடி புதிதாக அமைக்கப்பட்ட வீரசாவர்கர் விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தார்.  இந்த விமானம் நிலையத்தில் 50 லட்சம் பயனாளிகளை கையாளும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 விமானங்கள் நிறுத்தும்  அளவிற்கு இடவசதிகள்  கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது பகல் நேரத்தில் மின்விளக்குகள் பயன்பாட்டை குறைக்கும் அளவில் சூரிய ஒளி கிடைக்கும் வகையிலும் சிற்பி வடிவத்தில் இந்த பன்னாட்டு வீர சாவகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது என மத்திய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Related post

நமோ’ பாரத் ரயில் சேவையை பிரதம நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

நமோ’ பாரத் ரயில் சேவையை பிரதம நரேந்திர மோடி இன்று தொடங்கி…

நமோ பாரத் எனும் அதிவேக ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி (அக்டோபர் 20) இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவையானது டெல்லி -மீரட் இணைக்கும் வகையில்…
பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில்  இந்திய பாரம்பரிய  முறைப்படி வரவேற்பு !

பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில் இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு…

வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரிய  முறைப்படி வரவேற்பு. சர்வதேச யோகா தினத்திற்காக ஜூன் 21ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா ஐ.நா சபையின் யோகா…