அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புகள் மிகுந்த சாலை போக்குவரத்து நெருக்கடி அதிகளவில் காணப்படுகிறது. வாகன ஓட்டிகள், சாலை கடக்கும் பொதுமக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதற்காக, நந்தனம் சிக்னலில் 10 நாட்களுக்கு சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே அண்ணாசாலை X ஒயிட்ஸ் ரோடு சாலை, ஸ்மித் சாலை, திரு வி க X ஒய்ட்ஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றில் மாற்றம் செய்யப் போக்குவரத்து கழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related post

அண்ணா சாலையில் ரூபாய் 621 கோடி உயர்மட்ட மேம்பாலம் சாலை!

அண்ணா சாலையில் ரூபாய் 621 கோடி உயர்மட்ட மேம்பாலம் சாலை!

அண்ணா சாலையில் ரூபாய் 621 கோடி உயர்மட்ட மேம்பாலம் சாலையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி…