அண்ணாமலையின் ஆலோசகர் செல்வகுமார் கைது!

அண்ணாமலையின் ஆலோசகர் செல்வகுமார் கைது!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேசியதால் பாஜக நிர்வாகி அண்ணாமலையின் ஆலோசகர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.செல்வகுமார் பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவராகவும், அண்ணாமலையின் ஆலோசராகவும் இருந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் ” முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி உள்பட பலரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து செல்வகுமார் தனது ட்விட்டரில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.

செல்வகுமார் நேற்று வெளியிட்ட பதிவில் “செந்தில் பாலாஜியிடம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருக்கு என்றும், அவர் கமிஷன் செய்வதில் வல்லவர் என்றும் கூறினார். கோவைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பிறகு அனைத்து விதமான போதைப் பொருட்கள் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. போதை பொருட்கள் விற்பனையை தடை செய்யாமல் தனது கரூர் கம்பெனி வளர்ச்சிக்காக மேலும் சம்பாதிக்கலாம் எனும் நோக்கத்துடனும் போதைப்பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்தி வருகிறார்”.என்று தனது ட்விட்டரில் விமர்சித்தார். இதனால் செந்தில் பாலாஜி மீது இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இப் புகாரின் அடிப்படையில் பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் இன்று காலை 8 .15 மணி அளவில் கைது செய்யப்பட்டார். இதனை பாஜக நிர்வாகி அமர் பிரசாரத் ரெட்டி ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…