6000 என்ற மைல்கல்லை எட்டிய ரோகித் சர்மா !

6000 என்ற மைல்கல்லை எட்டிய ரோகித் சர்மா !

ஐ.பி.எல்   போட்டி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கப்பட்டு  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 18ஆம் தேதி அன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் சன் ரைஸ் ஆகிய இருவர் இடையே போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸ் ஹைதராபாத் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது.. மும்பை இந்தியனின் கேப்டனான ரோகித் சர்மா தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் ,192 ரன்களை, 5 விக்கெட் என ஆட்டத்தினை முடித்தது. பின்னர் இரண்டாவதாக ஆடிய ஹைதராபாத் அணி ஆட்டத் தொடக்கத்திலேயே அதிகமான விக்கெட்டுகளை எடுத்து  தோல்வியுற்றது.

ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ரோகித் சர்மா 14 ரன்களை எடுத்து 6000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை எட்டியுள்ளார் . ரோகித் சர்மா 232 போட்டியில் விளையாடி ஒரு சதம், 41 அரை சதங்கள் 6,014 ரன்களை ஐ.பி.எல் தொடரில் அடித்துள்ளார் இதற்கு முன்பு   விராட் கோலி (6844) ரன்கள்,  ஷிகர் தவான் (6477) ரன்கள் மற்றும்  டேவிட் வார்னர் (6109) ரன்களுக்கு மேலாக அடித்துள்ளனர். எனவே ஐ.பி.எல் வீரர்களின் பட்டியலில்  ரோகித் சர்மா (6014) ரன்கள் எடுத்து நான்காவது இடத்தில்  உள்ளார். 6000 ரன்களைக் கடந்த வீரரான ரோகித் சர்மாவிற்கு ரசிகர்களின் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Related post

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில்…
ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் தொடரான 16 ஆவது சீசனில் 54ஆவது போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் (மே 9)மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  இடையான போட்டி நடைபெற்றது.…