அட்சய திருதியை ‘எப்போதும் குறையாத’ வளம் 2023:

அட்சய திருதியை ‘எப்போதும் குறையாத’  வளம் 2023:

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் தொடர்ந்து வீட்டில் செல்வ வளம் பெருகும்.. ‘அட்சய’ என்றால் ‘எப்போதும் குறையாது’ என்றும் திருதியை என்றால் ’மூன்றாவது’ என்றும் அர்த்தம். எனவே இந்த நாளில் வாங்கும் எந்த ஒரு பொருளும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. அட்சய திருதியை திதி 22-04-2023,23-04-2023 ஆகிய 2 தேதிகளிலும் இருப்பதால் பொருட்கள் வாங்குவது, தானம் போன்றவற்றை 22-04-2023-ஆம் தேதியிலும் , வீடு பால் காய்ச்சுதல், வீடு குடி புகுதல், வாஸ்து போன்றவற்றை 23-04-2023 தேதியில் செய்வதே சிறந்தது.

2023ஆம் ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே திரிதியை திதி துவங்கி விடும். ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 09.27 மணி வரை மட்டுமே திரிதியை திதி உள்ளது.. தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 22 ஆம் காலை 07.49 மணி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 மணி வரை உகந்த நேரமாகச் சொல்லப்படுகிறது..அட்சய திரிதியை நாளில் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, நீராடி, விளக்கேற்றி வாசனை மலர்களைக் கொண்டு அன்னை மகாலட்சுமிக்கு பூஜை செய்து, பெருமாளையும் வழிபட செல்வ வளம் பெருகும்.

 

Related post