அசோக் செல்வனின் நடிக்கும் சபாநாயகன் திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம்!

அசோக் செல்வனின் நடிக்கும் சபாநாயகன் திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றம்!

அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் அறிமுகமானவர். சிறந்த கதாபாத்திர கதையைக் கொண்ட திரைப்படங்களிலே அசோக் செல்வன் நடித்து வருகிறார். நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் சபாநாயகன் திரைப்படத்தினை சி எஸ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் மேகா ஆகாஷ், சாந்தினி , கார்த்திகா, முரளிதரன் மைக்கேல், தங்கதுரை மற்றும் அருண்குமார் போன்றோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை கிளியர் வாட்டர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். தற்போது சபாநாயகன் திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகயிருந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகள் தாமதமாகுவதால் ஒத்திவைக்கப்பட்டு சபாநாயகன் திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related post