அக்டோபர் 15ஆம் தேதி தமிழ் மொழி இலக்கண திறனாய்வு தேர்வு!

அக்டோபர் 15ஆம் தேதி தமிழ் மொழி இலக்கண திறனாய்வு தேர்வு!

தமிழ் மொழி இலக்கண திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவர்களிடையே தமிழ் மொழியினை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கண திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் பங்கேற்று சிறப்பிடம் பெறும் 1500 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன் பிறகு பள்ளி கல்வித்துறை சார்பாக இரண்டு வருடத்திற்கு மாதம்தோறும் ரூ 1500 வீதம் வழங்கப்படுகிறது. 

இத்தேர்வில் பிளஸ் 1 மாணவர்கள் (www. dge. TN gov. in) என்ற இணையதளத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தினை இணையதளத்தின் பதிவிறக்கம் செய்த மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து ரூபாய் 50 கட்டணம் செலுத்தி தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் செப்டம்பர் 20 க்குள் ஒப்படைக்கவும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

Related post