பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா

தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதம் பங்குனி,
நட்சத்திரங்களில் 12-ஆவது நட்சத்திரம் உத்திரம்.
இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம்…

பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிறப்புக்குரியதாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் சிவன்- பார்வதி, முருகன்- தெய்வானை உள்பட பல தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை புதன்கிழமை நடக்கிறது. 5.4.2023 அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கவிருக்கிறது.பங்குனி உத்திர திருவிழா நாளை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது வரை உள்ளவர்கள் கடைபிடிக்கலாம். பங்குனி உத்திரத்தன்று விரதத்தைத் தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் கடைப்பிடித்து வந்தால், அடுத்த பிறவியில் தெய்வீகப் பிறவி கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன. பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related post

11வது சீசன் ப்ரோ கபடி போட்டி விரைவில் ஆரம்பம்- கபடி ரசிகர்கள் உற்சாகம்!

11வது சீசன் ப்ரோ கபடி போட்டி விரைவில் ஆரம்பம்- கபடி ரசிகர்கள்…

2024 PKL 11 ஆவது சீசன் ப்ரோ கபடி லீக் போட்டி விரைவில் தொடங்குகிறது.இது வரை 10 சீசன் முடிவடைந்த நிலையில்.புரோ கபடி போட்டியின் 11 ஆவது சீசன்…
திருச்சியில் காலாவதியான நூடுல்ஸ் சிறுமி பலி!

திருச்சியில் காலாவதியான நூடுல்ஸ் சிறுமி பலி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஜூடி மெயில்ஸ், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ், வயது…
நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் ஆண்டனி ஹிட்லர் படத்தில் நடித்துள்ளார்.இத் திரைப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார்.ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குநர் கௌதம்…