சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் சூடானில் பொது இடங்களில் துப்பாக்கி சண்டை ,குண்டு வீச்சின் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். சூடானில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் சூடானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது.
இதனையடுத்து இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையான (C -130 J) இரண்டு விமானங்கள் சவுதி அரேபியாவில் தயாராக உள்ளது. மேலும் இந்திய கடற்படையில் (ஐ.என்.எஸ் )சுமேதா கப்பலும் சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது என வெளியுறவு அமைச்சகம் தெரிந்துள்ளது. .வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் காவிரி’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்திற்கு வந்துள்ளனர் மேலும் பலர் வந்து கொண்டிருக்கின்றனர் அவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக நமது கப்பல்களும் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. சூடானில் உள்ள நமது சகோதரர்கள் அனைவருக்கும் உதவி செய்ய உறுதிப்பூண்டு உள்ளோம் என தெரிவித்தார்.