கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவாட்டில் பணம் வாங்கும் ஊழியர்களும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து பிரசவம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி பழைய மருத்துவமனை கட்டிடத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள், பிரசவ அறைக்குள் சென்றவுடன் அவர்களின் உறவினர்களிடம் வேலை ஆட்கள் பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் தரக்குறைவாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் தேவைகள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை, அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் கழிவறைகளில் தண்ணீர் சரியாக வரவில்லை என்றும் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனையின் நிர்வாகியிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை எனவும் கூறினர். மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

Related post

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்  படப்பிடிப்பு ஆரம்பம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் அடுத்தபடியாக கோட் திரைப்படத்திற்கு அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கிறார். வலிமை, துணிவு திரைபடத்தின் இயக்குநரான ஹெச் வினோத்இந்…
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

 தமிழ்நாட்டில் தமிழ் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி, கோதையாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடகிழக்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரன கன்னியாகுமரியில் உள்ள…
தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் 412 இடங்களில் நீர் அகற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை!

 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணியும் மழைநீர் அகற்றும் பணிகளைத் தமிழக…