ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ ,அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் விளாசினர். கடைசி 6 ஓவர்களில் மட்டும் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 94 ரன்களை சேர்த்து அசத்தினர். இதையடுத்து 207 ரன்கள் என இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 2 தோல்வியை மும்பை அணி பெற்றுள்ளது.
இந்த தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், பவுலிங்கின் போது எங்கள் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தது. ஆனால் கடைசி சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் உள்ளது. எங்களின் பலம் எங்கள் பேட்டிங் ஆனால் இன்று எங்களின் நாளாக அமையவில்லை.பவுலிங்கின் போது டெத் ஓவர்களும், பேட்டிங்கின் போது தொடக்கமும் சரியாக அமையவில்லை என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.