இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும் , சம் ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 10.4.2023 அன்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி . ஓய் சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஜிப்சம், உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் இருப்பதாக நிபுணர்கள் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தமிழக அரசின் உயர்மட்டக்குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை மட்டும் வேதா நிறுவனம் அதன் சொந்த செலவில் அகற்ற அனுமதிக்கப்படும் . மேலும் அரசு அனுமதிக்காத வேறு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளது.