முதல்வரின் நிவாரண நிதிக்கு…….. நிதிசெலுத்த வந்த முதியவர்

முதல்வரின் நிவாரண நிதிக்கு……..  நிதிசெலுத்த வந்த முதியவர்

தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு யாசகமாக பெற்று 55 லட்சம் கொடுத்த முதியவர்!
யாசகம் பெற்ற பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு செலுத்த வந்த முதியவர் பூல்பாண்டியன். (வயது 75). இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மும்பை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் வாழ்ந்து வந்தவர். சில இடங்களில் இஸ்திரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். மேலும் யாசகம் பெற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை பல்வேறு நல திட்டங்களுக்கு கொடுத்து வந்துள்ளார். அவர் யாசகம் செய்த பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், அவருடைய குடும்பத்தினர். “அந்தப் பணத்தை எங்களிடம் வழங்க வேண்டும்”என்றனர். இதனால் வெளியேறிய பூல் பாண்டியன் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் பல தொழிலதிபர்களிடம் நன்கொடையாகவும் பணத்தைப் பெற்றுள்ளார்.

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக மட்டும் இது வரை ரூ. 55 லட்சம் வழங்கி உள்ளதாக சொல்கிறார். இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை நேரில் சந்தித்து, தன்னிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் முதல்வரின் நிவாரண நிதியில் நேரடியாக செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை கேட்ட ஆட்சியர் கற்பகம், பொன்னாடை போர்த்தி முதியவரான பூல் பாண்டியனை கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த தொகை ரூ10,000 ரொக்க பணத்தை நிவாரண நிதியில் செலுத்தினார்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…