அயலி இணையத் தொடர் சிறப்பு திரையிடல்!
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியானது.ஜி5 ஓ டி டி தளத்தில் வெளியான இதில் அபி நட்சத்திரா அனுமோல் மற்றும் மதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அயலி வெப் சீரிஸ் 8 எபிசோடுகளைக் கொண்டுள்ளது.பெண் கல்வியின் அவசியத்தை பேசும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அயலி வெப் சீரிஸ் கொளத்தூரில் உள்ள எவர்வின் வித்யாஸ்ரம்(Everwin Vidhyashram, Kolathur) பள்ளி மாணவிகளுக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு வகுப்பைச் சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.