பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா

தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதம் பங்குனி,
நட்சத்திரங்களில் 12-ஆவது நட்சத்திரம் உத்திரம்.
இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம்…

பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிறப்புக்குரியதாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் சிவன்- பார்வதி, முருகன்- தெய்வானை உள்பட பல தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை புதன்கிழமை நடக்கிறது. 5.4.2023 அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கவிருக்கிறது.பங்குனி உத்திர திருவிழா நாளை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது வரை உள்ளவர்கள் கடைபிடிக்கலாம். பங்குனி உத்திரத்தன்று விரதத்தைத் தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் கடைப்பிடித்து வந்தால், அடுத்த பிறவியில் தெய்வீகப் பிறவி கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன. பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related post

6ஆவது உலகக் கோப்பை காரம் சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காசிமா சாம்பியன் பட்டம் வென்றார்

6ஆவது உலகக் கோப்பை காரம் சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காசிமா…

அமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனைகள்…
புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி டெல்லியில் அண்டை மாநிலங்களிலிருந்து…
விடுதலை 2 டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் !

விடுதலை 2 டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் !

விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இத்திரைப்படத்தின் கதை சர்வதேச விழாவில் திரையிடப்பட்டு பாராட்டும் பெற்றதைத் தொடர்ந்து விடுதலை திரைப்படத்தின் இரண்டாம்…