தமிழகத்தில் 500டாஸ்மாக் கடைகள் மூடப்படும் !

தமிழகத்தில் 500டாஸ்மாக் கடைகள் மூடப்படும் !

டாஸ்மாக் (டாசுமாக், TASMAC) எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழகத்தில் டாஸ்மார்க் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் “படிப்படியாக டாஸ்மார்க் கடைகளை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு மதுவிலக்கு துவக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது” என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மார்க் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 11% டாஸ்மாக் கடைகளை மூட அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு கணக்கெடுப்பின் படி மூடப்படும்.

இதன் அடிப்படையில் 50 மீட்டருக்கு அருகருகே அமைந்துள்ள கடைகள், கல்லூரிகள், பள்ளி மற்றும் கோயிலுக்கு அருகே அமைந்துள்ள கடைகள், வருவாய் குறைவாக ஈட்டும் சில்லரை விற்பனை கடைகள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள கடைகள் என அவற்றைக் கண்டறிந்து கணக்கெடுப்பினை தொடங்கி தகுதியான 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மதுவிலக்கு துவக்கம் பெறும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவுறுத்தி இருந்தார்.

 

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை…