ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அரசு அனுமதிக்காத எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடி இருந்தது. இதனை அடுத்து தமிழக அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது . ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும் , சம் ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 10.4.2023 அன்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி . ஓய் சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஜிப்சம், உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் இருப்பதாக நிபுணர்கள் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தமிழக அரசின் உயர்மட்டக்குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை மட்டும் வேதா நிறுவனம் அதன் சொந்த செலவில் அகற்ற அனுமதிக்கப்படும் . மேலும் அரசு அனுமதிக்காத வேறு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

Related post

சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு 10,000ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்!

சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு 10,000ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்!

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் பெஞ்சமல் புயலால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்தது இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்த…
பி எஸ்.எல்.வி. சி-59 இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோ அறிவிப்பு!

பி எஸ்.எல்.வி. சி-59 இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியாவில் விண்ணில் இன்று மாலை பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ். எல்…
வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர்!

வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்…

 வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணி விழாவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 2-ஆம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய…