ரேஷன் கடை ஊழியருக்கு இன்பச் செய்தி

ரேஷன் கடை ஊழியருக்கு இன்பச் செய்தி

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு, ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, என 1.1.2023 ஆம் தேதி முதல் நியாய விலை கடை ஊழியர்களுக்கு 2021 பிப்ரவரி 22 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. 2022 ஜனவரி ஒன்று முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்நிலை வழங்குமாறு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து 2022 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நியாய விலை கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்களுக்கு 28% உத்தரவிட்டார். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களைப் பெறவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள், 2,852 கட்டுநர்கள் மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால் ஆண்டுடொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தித் தர தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு(ரூ8,600-ரூ29,000ம்),கட்டுனர்களுக்கு(ரூ7,800_ரூ26,000ம்) சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…