பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் அயலி!

பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் அயலி!

அயலி இணையத் தொடர் சிறப்பு திரையிடல்!
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியானது.ஜி5 ஓ டி டி தளத்தில் வெளியான இதில் அபி நட்சத்திரா அனுமோல் மற்றும் மதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அயலி வெப் சீரிஸ் 8 எபிசோடுகளைக் கொண்டுள்ளது.பெண் கல்வியின் அவசியத்தை பேசும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அயலி வெப் சீரிஸ் கொளத்தூரில் உள்ள எவர்வின் வித்யாஸ்ரம்(Everwin Vidhyashram, Kolathur)   பள்ளி மாணவிகளுக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு வகுப்பைச் சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். படத்தைப் பார்த்த அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு எனப் புகழாரம் சூட்டினார். ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ் அதற்காக இந்த அரசு பாடுபட்டு வருகிறது என்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றும் பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் காலங்களை நினைவுப்படுத்துகிறது. இப்படி ஒரு சிறந்த படத்தைக் கொடுத்த படக் குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் என்று கூறினார் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Related post

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்…
பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிசில் 33 ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில்,…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சாவூர் மாவட்டம், அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளையே ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழக…